Categories
மாநில செய்திகள்

சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரம்….. 4 மருத்துவமனைகளை மூட….. அதிரடி உத்தரவு….!!!!!

சிறுமியின் கருமுட்டை தானம் என்ற பெயரில் சட்டத்திற்கு புறம்பாக கருமுட்டை விற்பனை நடந்த விவகாரம் தமிழகத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக 16 வயது சிறுமியின் புகாரின் பெயரில் அவருடைய தாயார் மற்றும் அவரின் இரண்டாவது கணவர், புரோக்கர் உள்ளிட்ட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். ஈரோடு சிறுமியின் கருமுட்டையை எடுத்து விற்பனை செய்த விவகாரத்தில் நான்கு மருத்துவமனைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததாக அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கருமுட்டை தானம் குறித்த சாதக பாதகங்கள் சிறுமியிடம் முறையாக விளக்கப்படவில்லை. விசாரணைக்கான ஆவணங்களை மருத்துவமனைகள் முறையாக கொடுக்கவில்லை. கருமுட்டை விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளில் உள்ள ஸ்கேன் நிலையங்களை மூடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் இருந்து இரண்டு தனியார் மருத்துவமனைகள் நீக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் மீது நீதிமன்றங்கள் மூலம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிறுமியை அவரது குடும்பத்தினரை நிர்பந்தம் செய்து கருமுட்டை விற்பனை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஈரோடு சுதா மருத்துவமனை, ஓசூர் விஜய் மருத்துவமனை, பெருந்துறை சேலம் மருத்துவமனைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நான்கு மருத்துவமனைகளிலும் 15 நாட்களுக்குள் உள்நோயாளிகளை டிஸ்சார்ஜ் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |