சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் கொத்தனாருக்கு 10 வருடங்கள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரத்தில் கொத்தனாரான சுஜித் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் நான்கு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 2013-ஆம் ஆண்டு சுஜித் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சுஜித்தை கைது செய்தனர். அதன்பின் ஜாமினில் வெளியே வந்த சுஜித் சிறுமியை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. இதற்கிடையே சுஜித் மீதான சிறுமி பாலியல் பலாத்கார வழக்கை விசாரித்த நீதிமன்றம் சுஜித்துக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.