Categories
உலக செய்திகள்

“சிறுமியின் லாலிபாப் மிட்டாயை பறித்து செல்லும் குட்டி நாய்”…. வைரலான வீடியோ காட்சி… குவிந்து வரும் லைக்…!!!!!!

சிறுமியிடமிருந்து லாலிபாப் மிட்டாயை  குட்டி நாய் பறித்து சென்ற காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சமூக ஊடகங்களில் வெளியாகும் பல விஷயங்கள் ரசனையை தூண்டும் விதமாக அமைந்திருக்கும். அந்த வகையில் வெளியான வீடியோ ஒன்று தற்போது வைரலாக பரவி வருகிறது. அதில் சிறுமி ஒருவர் தனது கையில் லாலிபாப் மிட்டாய் உடன் தெருவோர பகுதியில் நடந்து சென்று கொண்டிருக்கின்றார். சிறுமியை பின்தொடர்ந்த கருப்பு நிற குட்டி நாய் ஒன்று செல்கிறது. அதற்கு மிட்டாய் சாப்பிடுவதற்கு ஆசை ஆனால் கேட்கவா முடியும்? அந்த சிறுமியிடம் அந்த நாய்க்குட்டி விளையாடிக் கொண்டே செல்கிறது.

சிறுமியும் திரும்பிப் பார்த்துக்கொண்டு குட்டி நாயுடன் விளையாடிக்கொண்டே செல்கின்றாள். ஒருகட்டத்தில் குட்டி நாய் சிறுமியின் கால்களை சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கிறது. இதனால் அதைத் துரத்திவிட திரும்பும் சிறுமி தவறுதலாக மிட்டாயை கீழே போட்டு விடுகின்றாள். மிட்டாய் தரையில் விழுந்து மண் ஒட்டியிருக்கிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி அதிலிருந்து மீள்வதற்குள் மிட்டாயை தூக்கிக்கொண்டு நாய்  ஓடி விடுகின்றது. அந்த மிட்டாய் தவறவிட்ட சோகத்தில் சிறுமி அழ தொடங்குகிறார். இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்து இருக்கின்றனர். இதனை லட்சக்கணக்கானோர் பார்வையிட்டு லைக் செய்து, பகிர்ந்தும் இருக்கின்றனர். மேலும் விமர்சனங்களையும் பதிவிட்டு வருகிறார்கள்.

Categories

Tech |