Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சிறுமியுடன் ஏற்பட்ட பழக்கம்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது…!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கும் ஓசூர் அரசனட்டி பகுதியை சேர்ந்த நாகா(25) என்ற வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி நாகா சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் ஓசூர் டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் நாகாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |