சிறுமியை கடத்திச் சென்ற வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் இருக்கும் தனியார் ஜவுளிக்கடையில் தமிழ்ச்செல்வன் என்பவர் தங்கி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தமிழ்ச்செல்வன் 15 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பண்ருட்டிக்கு அழைத்து சென்றுள்ளார். இதனையடுத்து பேருந்து நிலையத்தில் இருவரும் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்ததை பார்த்த சிலர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது தமிழ்செல்வன் சிறுமியை கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் தமிழ்ச்செல்வனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.