8 வயது சிறுமி நீச்சல் குளத்தில் 11 அடி நீள மலைப்பாம்புடன் இருக்கும் காணொளி வைரலாகி வருகிறது
ஒவ்வொரு தினமும் சமூகவலைதளத்தில் பல காணொளிகள் வெளியாகி அனைவரையும் ஆச்சரியத்தில் உள்ளாக்கும். அவ்வகையில் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த சிறுமி ஒருவர் மலைப்பாம்புடன் நீச்சல் குளத்தில் நீந்திக் கொண்டிருக்கும் காணொளி தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகின்றது. இன்பார் என்ற சிறுமி தெற்கு இஸ்ரேலில் அமைந்துள்ள விலங்குகள் சரணாலயத்தில் தனது பெற்றோருடன் வாழ்ந்து வருகிறார். அங்கு அவர் 11 அடி நீளம் கொண்ட பெல்லி என்ற மலைப் பாம்பை செல்லப்பிராணியாக வளர்த்து வருகிறார்.
பள்ளிகள் மூடப் பட்டதால் சிறுமி அதிக நேரம் அந்த மலைப் பாம்புடன் பொழுதைப் போக்குவதாக அவரது பெற்றோர் கூறுகின்றனர். இது குறித்து சிறுமி கூறுகையில், “எனது நேரத்தை போக்க இந்த பாம்பு மிகவும் உதவுகிறது. நான் இதனை அதிகமாக நேசிக்கிறேன். சில நேரங்களில் நான் பாம்பின் தோளை உரிப்பதற்கு உதவி செய்வேன். கொரோனா தொற்றின்போது அது மகிழ்ச்சியுடன் இருப்பதற்கு உதவி வருகின்றேன் என்றார்.
அனைத்து விலங்குகளுடனும் இன்பார் ஒன்றாக வளர்க்கப்பட்டவர். குழந்தையாக இருந்தபோதே நீச்சல்குளத்தில் பாம்புடன் நீந்தினாள். இப்போது பாம்பும் வளர்ந்துவிட்டது, எங்கள் மகளும் வளர்ந்து விட்டாள். அதனால் தற்போது ஒன்றாக நீச்சல் குளத்தில் நீந்தி வருகின்றனர். இது குறித்து எங்களுக்கு எந்த ஆச்சரியமும் தோன்றவில்லை இயல்பான ஒன்றுதான் என சிறுமியின் தாய் சரித் ரேகேவ் கூறியுள்ளார்.
For eight-year-old Inbar, her favorite companion to cool off in her small backyard pool is an 11-foot yellow python called Belle https://t.co/XEsjdQ8hyW pic.twitter.com/FVreldFTlf
— Reuters (@Reuters) October 9, 2020