சிறுமியை கர்ப்பமாக்கிய நபருக்கு 25 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வாண்டையார் இருப்பு தெற்கு தெருவில் ரவிச்சந்திரன்(40) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2020- ஆம் ஆண்டு உறவினருடைய 14 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது ரவிச்சந்திரன் அவருக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். மேலும் ஆசை வார்த்தைகள் கூறி அந்த சிறுமியை வெளியே அழைத்து சென்று ரவிச்சந்திரன் பாலியல் பலாத்காரம் செய்து, யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டியுள்ளார்.
இதனை அடுத்து உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்து பார்த்தபோது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரணை நடத்தி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் ரவிச்சந்திரனை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் 50 ஆயிரம் ரூபாய் அபராதமும், ரவிச்சந்திரனுக்கு 25 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டது.