5-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை முதியவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள லந்தகோட்டை கிராமத்தில் முதியவரான ராஜலிங்கம் என்பவர் வசித்துவருகிறார். இந்த முதியவர் அதே பகுதியில் வசிக்கும் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.
இந்நிலையில் முதியவர் இந்த சிறுமியை மறைவான இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததை அங்கிருந்தவர்கள் பார்த்து உடனடியாக அவரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டனர். இதனை அடுத்து போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராஜளிங்கத்தை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.