15 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொண்ட தொழிலாளி உள்பட 4 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்துள்ள அ.வாடிப்பட்டியில் வேல்முருகன் என்பவர் வசித்து வருகிறார். கூலித்தொழிலாளியான இவருக்கு 15 வயது சிறுமியை வற்புறுத்தி பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் திருமணம் செய்து வைத்தனர். இதுகுறித்து சிலர் மாவட்ட குழந்தைகள் நலக் குழுவுக்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவலறிந்து குழந்தை நலக்குழு தலைவர் விஜயசரவணன் மற்றும் அலுவலர்கள் அப்பகுதிக்கு சென்று சிறுமி மற்றும் குடும்பத்தினர் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் தேனி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் போலீசார் சிறுமியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொண்ட வேல்முருகன், சிறுமியின் பெற்றோர் என 4 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.