ஜாமீன் மூலம் வெளியே வந்தவர் சிறுமியை கர்ப்பமாகியதால் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அருகே இருக்கும் சேபட்டி பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் சென்ற 2020 ஆம் வருடம் 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டார். பின் இவர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் ஜாமின் மூலம் வெளியே வந்தார். இந்த நிலையில் அதே சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக சொல்லப்படுகின்றது.
இதில் சிறுமி கர்ப்பமானால் இது குறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டார்கள். அதில் சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் சந்தோஷ் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.