சிறுமியை கர்ப்பமாக்கிய தாயின் கள்ளக்காதலனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள மல்லூரில் மூட்டை தூக்கும் தொழிலாளியான குமரவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி குழந்தைகள் இருக்கின்றனர். இவர் குடித்துவிட்டு அடிக்கடி தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் குமரவேலின் மனைவி கணவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இந்நிலையில் வீராணம் பகுதியில் கணவரை இழந்து மகன், மகளுடன் வசிக்கும் ஒரு பெண்ணுடன் குமரவேலுக்கு பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது.
இதனை அடுத்து அந்த பெண்ணின் 13 வயது மகளை குமரவேல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை வெளியே கூறினால் தாய் தந்தையை கொலை செய்து விடுவதாக குமரவேல் மிரட்டியுள்ளார். இதனால் சிறுமி தற்போது கர்ப்பமாக உள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் குமரவேலை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.