சிறுமியை திருமணம் செய்துகொண்டு கர்ப்பமாக்கிய வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்துள்ள ஓலபாளையம் கிராமத்தில் அருண்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவருக்கும் வரதராஜபுரம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி திருமணம் செய்து கொண்டு மோகனூரில் வசித்து வந்துள்ளனர். இதனையடுத்து அருண்குமார் சிறுமியை பாலியல் பலத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி கர்பமடைந்துள்ளர்.
இதனையறிந்த சைல்டு லைன் உறுப்பினர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் கல்பனா இதுகுறித்து குழந்தை திருமண தடுப்பு விரிவாக்க அலுவலர் செல்வராணிக்கும், எருமப்பட்டி காவல்நிலையத்திற்கும் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி சிறுமியை திருமணம் செய்துகொண்டு பாலியல் பலாத்காரம் செய்த அருண்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.