Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவர்…. சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்….. விசாரணையில் தெரிந்த உண்மை….!!!

சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி மேம்பாலம் அருகே 60 வயது மதிக்கத்தக்க நபர் கடலமாக கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்பட்ட நபர் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த கூலி தொழிலாளியான அன்பழகன்(57) என்பது தெரியவந்தது. இவர் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அன்பழகன் அதே பகுதியில் வசிக்கும் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த மாணவி தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இது குறித்து மாணவியின் அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதற்கிடையே சிறுமியை கர்ப்பமாக்கியதை அறிந்த கிராம மக்கள் அன்பழகனை கட்டி வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். அதான் பிறகு பொன்னேரிக்கு தப்பி சென்ற முதியவரை போலீசார் தீவிரமாக தேடி. வந்த நிலையில் முதியவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |