Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர்…. வேறு பெண்ணுடன் திருமணம்…. போலீஸ் வலைவீச்சு…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வயலப்பாடி பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கும் முகேஷ் என்ற வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவர் சிறுமியை காதலிப்பதாக ஆச வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமியை அவரது பெற்றோர் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர் சிறுமி 8 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு தான் முகேஷுக்கும், வேறு ஒரு பெண்ணுக்கும் திருமணம் நடந்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிந்த போலீசார் தலைமறைவாக இருக்கும் முகேஷை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |