Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சிறுமியை கற்பழித்து கொன்ற நபர்…. குண்டர் சட்டத்தில் தொழிலாளி கைது…. கமிஷனரின் அதிரடி உத்தரவு…!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற நபரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீஸ் கமிஷனர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 14 வயது சிறுமி வசித்து வந்துள்ளார். கடந்த மாதம் 13-ஆம் தேதி இந்த சிறுமி திடீரென காணாமல் போய்விட்டார். இதுகுறித்து அவரது தாயார் கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து மறுநாள் காலை அப்பகுதியில் இருக்கும் முட்புதரில் சாக்குமூட்டையில் கட்டி வீசப்பட்ட நிலையில் சடலமாக கிடந்த சிறுமியை காவல்துறையினர் மீட்டனர். இந்த வழக்கின் குற்றவாளியானஅதே பகுதியில் வசிக்கும் கட்டிட தொழிலாளியான முத்துக்குமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.

அந்த விசாரணையில் முத்துக்குமாருக்கும், சிறுமியின் தாயாருக்கும் பழக்கம் இருந்ததும், நகை கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் முத்துக்குமார் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தை இறுக்கி கொன்றதும் தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் முத்துக்குமாரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்துவிட்டனர். இந்நிலையில் போலீஸ் கமிஷனர் பிரதீப்குமார் முத்துக்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |