பிரித்தானியா நாட்டில் தன் குடும்பத்துடன் சுற்றுலா சென்ற 8 வயது சிறுமியை பாம்பு ஒன்று தீண்டியது.
Kinver Edge எனும் இடத்துக்கு ஒரு குடும்பம் சுற்றுலா சென்றிருந்த நிலையில், அப்பகுதியில் ஒரு பாம்பு நடமாடுவதாக சிலர் தெரிவித்து உள்ளனர். எனினும் இந்த குறும்புக்கார சிறுமி அந்தப் பாம்பைத் தன் விரலாலேயே தொட்டுப் பார்த்திருக்கிறாள். பொதுவாகவே பாம்புகள் மனிதர்கள் நெருங்கும்போது விலகிச்செல்லவே பார்க்கும். ஆனால் இந்தப் பாம்பு அப்படி விலகாமல் அச்சிறுமியின் சுட்டு விரலைக் கொத்தி இருக்கிறது. இதையடுத்து உடனடியாக சிறுமியின் தந்தையான David Rathbone, மகளைத் தூக்கி அவளது விரலை வாய்க்குள் வைத்து இரத்தத்தை உறிஞ்சி இருக்கிறார். அதற்குள் அப்பாம்பு Davidஐயும் தீண்டி இருக்கிறது.
அதன்பின் சிறுமிக்கு கை வலி அதிகரித்ததால் உடனே காரில் ஏறி தந்தையும், மகளும் அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்றனர். ஆனால் அதற்குள் சிறுமியின் கை முழுவதுமே வீங்கியுள்ளது. அதனை தொடர்ந்து மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டதும், பர்மிங்காம் சிறுவர் நல மருத்துவமனைக்குக் அச்சிறுமி அழைத்து செல்லப்பட்டுள்ளார். அங்கு சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதைத் அடுத்து அவர் நன்றாக இருப்பதாக உணர்வதாக தெரிவித்துள்ளார். இருந்தாலும் மருத்துவர்கள் சிறுமியை தங்கள் கண்காணிப்பில் வைத்துள்ளனர். மேலும் சிறுமியின் தந்தைக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.