Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சிறுமியை கொன்ற சிறுத்தை சிக்கியது…. வனத்துறையினரின் நடவடிக்கை…. நிம்மதியடைந்த பொதுமக்கள்…!!

சிறுமியை கொன்ற சிறுத்தை வனத்துறையினர் வைத்த கூண்டுக்குள் சிக்கியது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரக்காடு பகுதியில் பாலன் என்பவருக்கு சொந்தமான தேயிலை தோட்டம் அமைந்துள்ளது. இங்கு வட மாநில தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி இருந்து வேலை பார்த்து வருகின்றனர். கடந்த 10-ஆம் தேதி அசாம் மாநிலத்தை சேர்ந்த நிஷாந்த் என்பவரது மகள் சரிதா(4) சிறுத்தை தாக்கியதால் பரிதாபமாக உயிரிழந்தாள்.

இதனால் வனத்துறையினர் சிறுத்தையை பிடிப்பதற்காக இரண்டு கூண்டுகளை வைத்தனர். நேற்று அதிகாலை வனத்துறையினர் வைத்த கூண்டுக்குள் சிறுத்தை சிக்கியது. இதனை அடுத்து சிறுத்தையை கூண்டுடன் வாகனத்தில் ஏற்றி முதுமலை வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டனர். இதனால் அப்பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

Categories

Tech |