லண்டனில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
லண்டன் நாட்டில் இசில்வொர்த்தில் தோர்ன்பரி பூங்கா அமைந்துள்ளது. இந்தப் பூங்காவில் வைத்து வாலிபர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன்பின் அந்த இடத்திலிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி ஓடினார். இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அப்புகாரை ஏற்ற காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில் 21 வயதாகின்ற வாலிபரை கைது செய்தனர். இதனையடுத்து அந்த வாலிபர் தற்போது ஜாமினில் விடுவிக்கப்பட்டார். ஆனால் அடுத்த மாதம் மேல் விசாரணையை எதிர்கொள்ளவுள்ளார். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கான ஆதரவையும், உதவியையும் வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் அறிவித்தனர்.