சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த மாற்றுத்திறனாளிக்கு நீதிபதி 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டத்திலுள்ள ஓவேலி பகுதியில் மாற்றுத்திறனாளியான அப்பாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமியை தனி அறைக்கு அழைத்து சென்று அப்பாஸ் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனால் அந்த சிறுமி அழுது கொண்டே வீட்டிற்கு சென்று நடந்தவற்றை தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கூடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பாஸை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அப்பாஸுக்கு 38 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி கூறியதால் அப்பாஸ் அதிகபட்சமாக 20 வருடம் ஜெயில் தண்டனையை அனுபவிக்க வேண்டும்.