Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சிறுமியை தாயாக்கிய வாலிபர்…. 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள முதுநகர் சோனாங்குப்பம் பகுதியில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆனது. இந்நிலையில் தாய், தந்தையை இழந்து பாட்டி வீட்டில் வசிக்கும் 16 வயது சிறுமியுடன் பெருமாளுக்கு பழக்கம் ஏற்பட்டது. கடந்த 2020- ஆம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த சிறுமியை பெருமாள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன்பிறகு சிறுமி கர்ப்பமானார். இதுகுறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிந்த போலீசார் பெருமாளை கைது செய்தனர்.

இதற்கிடையில் கடந்த 2021-ஆம் ஆண்டு சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த வழக்கு கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி எழிலரசி பெருமாளுக்கு 2000 ரூபாய் அபராதமும், 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மாவட்ட சமூக பாதுகாப்பு துறை மூலம் 6 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவு பிறப்பித்தார்.

Categories

Tech |