திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை பகுதியில் பெயிண்டரான மணிகண்டன்(27) என்பவர் வசித்து வருகிறார். இவரும் பொள்ளாச்சியை சேர்ந்த 15 வயது சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் மணிகண்டன் சிறுமியை திருமணம் செய்து கொண்டு உடுமலையில் இருக்கும் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் சிறுமி தனது தாய் வீட்டிற்கு வந்துவிட்டார்.
நேற்று முன்தினம் மணிகண்டன் சிறுமியின் வீட்டிற்கு சென்று தன்னுடன் வாழ வருமாறு அழைத்துள்ளார். அதற்கு சிறுமி மறுப்பு தெரிவித்ததால் கோபமடைந்த மணிகண்டன் கத்தியால் அவரை குத்தியுள்ளார். இதனால் படுகாயமடைந்த சிறுமி தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் மணிகண்டனை கைது செய்தனர்.