Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சிறுமியை தூக்கி சென்ற தொழிலாளி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கருப்பமூப்பன்பட்டி பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் மரம் வெட்டும் தொழிலாளி. இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் 7 வயது சிறுமி வீட்டிற்கு வெளியே நின்று விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது செல்வம் சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் தாய் வத்தலகுண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் செல்வத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |