Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடூரம்…. போக்சோ சட்டத்தில் கைதான வாலிபர்… நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் 25 ஆயிரம் அபராதமும் விதிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள நெடுவாசல் பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். கூலி வேலை செய்துவரும் பாலமுருகன் கடந்த 2009 ஆம் ஆண்டு 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததால் அச்சத்தில் சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் சிறுமியின் பெற்றோர்கள் ஆலங்குடியிலுள்ள மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதுக்குறித்து வழக்கு தொடர்ந்த காவல் துறையினர் சிறுமியை பலாத்காரம் செய்த பால முருகனை போக்சோ சட்டத்தில் கைது செய்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சத்யா தீர்ப்பு வழங்கியுள்ளார். அந்த தீர்ப்பில் பாலியல் தொந்தரவு செய்த குற்றத்திற்காக பாலமுருகனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், 25 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூபாய் 2 லட்சம் உதவித் தொகை வழங்க தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |