பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் யாசிர் ஷா மீது 14 வயது சிறுமி பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான யாசீர் ஷா மற்றும் அவரது நண்பர் பர்ஹான் என இருவரும் இணைந்து துப்பாக்கி முனையில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து படம் எடுத்து மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும் இதை யாரிடமும் கூறக்கூடாது என தெரிவித்துள்ளதாக அந்த சிறுமி இஸ்லாமாபாத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரபல கிரிக்கெட் வீரர் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.