சிறுமியை பலாத்காரம் செய்து கொடூரமாக கொன்று காட்டில் வீசிய குற்றவாளிகளுக்கு ராஜஸ்தானில் உள்ள பூண்டி மாவட்ட போக்சோ நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது.
சிறுமியின் குடும்பத்திற்கு 1.20 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சுல்தான் பில் (27), சோட்டு லால் (62) ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. மற்றொரு 17 வயது குற்றவாளியிடம் விசாரணை நடந்து வருகிறது.
பலியானவர் 15 வயது சிறுமி. உடலிலும் பலத்த காயங்கள் இருந்தன. போலீசார் 100 பக்க குற்றப்பத்திரிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இச்சம்பவம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23ம் தேதி நடந்தது. வனப்பகுதிக்கு அருகே ஆடு மேய்க்கச் சென்ற சிறுமியை கும்பல் சித்ரவதை செய்து கொன்றது. அந்த கும்பல் உடலை வனப்பகுதியில் விட்டுவிட்டு தப்பிச் சென்றது. 12 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த போலீசார், 40 நாட்களில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.