Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து எட்டு முறை கரு முட்டை விற்பனை”…. தாய் உட்பட 3 பேர் போக்சோவில் கைது… போலீஸ் விசாரணை…!!!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து எட்டு முறை கரு முட்டை விற்ற தாய் உட்பட 3 பேரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில்  வசித்த 38 வயதுடைய பெண்ணிற்கு 16 வயதில் ஒரு சிறுமி உள்ளார். அந்த சிறுமிக்கு மூன்று வயது இருக்கின்ற போது அந்தப் பெண் தனது கணவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். அதன் பின் ஈரோட்டில் வசித்த 40 வயதுடைய பெயிண்டர் ஒருவருடன் அந்தப் பெண்ணிற்கு கள்ள தொடர்பு ஏற்பட்டுள்ளது. அதன் பின் அந்தப் பெண் அவருடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். சிறுமியின் தாய் தனியார் மருத்துவமனையில் தனது கருமுட்டையை விற்று வருவதை வாடிக்கையாக கொண்டிருந்துள்ளார். அதன் மூலம் கிடைக்கின்ற வருமானத்தில் அந்தப் பெண்ணும், கள்ளக்காதலன் சந்தோசமாக வாழ்ந்து வந்துள்ளனர்.

அதன்பின் சிறுமியை கரு முட்டை விற்பனை செய்வதில் ஈடுபடுத்த அவர்கள் முடிவு செய்தார்கள். இதற்காக சிறுமியை 12 வயதிலிருந்து கருமுட்டை விற்பதற்காக சிறுமியின் தாய், கள்ளக்காதலன் தயார் செய்து வந்துள்ளனர். இதன்காரணமாக சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அதன்பின் அவர் பலமுறை சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். கரு முட்டை விற்பனை செய்து பணம் சம்பாதிப்பதற்காக சிறுமியின் தாயும் அதற்கு சம்மதித்துள்ளார். சிறுமியின் கருமுட்டையைப் விற்பதற்கு அவருடைய வயது அதிகமாக இருக்க வேண்டும். அதற்காக பொய்யான ஆவணங்களை தயார் செய்து உள்ளார்கள்.

சிறுமியின் தாயும், அவரைப்போன்று கருமுட்டை விற்கும் ஈரோடு கைகாட்டி வலசு திருவள்ளுவர் நகரில் வசித்த 36 வயதுடைய மாலதி என்ற பெண்ணும் சேர்ந்து சிறுமிக்கு வேறு பெயரில் 1995 ஆம் வருடம் பிறந்ததாக புதிய ஆதார் கார்டு பெற்றுள்ளார்கள். இந்த பொய்யான ஆவணத்தை பயன்படுத்தி சேலம், பெருந்துறை, ஈரோடு, ஓசூர் ஆகிய இடங்களில் தனியார் மருத்துவமனைகளுக்கு சிறுமியை அவருடைய  தாயும், மாலதியும் கூட்டிச்சென்று கரு முட்டை விற்று வந்துள்ளார்கள். இதற்கு கருமுட்டை கொடுத்ததற்கு சிறுமிக்கு ஒவ்வொரு முறையும் ரூ 20,000 பணமும், புரோக்கராக செயல்பட்ட மாலதிக்கு கமிஷனாக ரூ 5,000 பணமும் மருத்துவமனை சார்பாக கொடுக்கப்பட்டுள்ளது.  சிறுமியின் தாயும், அவருடைய கள்ளக்காதலனும் மருத்துவமனையில் கொடுக்கப்பட்ட பணத்தை சிறுமிடமிருந்து பெற்றுக்கொள்வார்கள்.

இதேபோன்று சிறுமியை மொத்தம் எட்டு முறை கருமுட்டை கொடுக்க கட்டாயப்படுத்தினார்கள். மேலும் கருமுட்டை கொடுப்பதை வெளியில் சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டினார்கள். இந்நிலையில் சிறுமிக்கு அவர்கள் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்ததால் மிகவும் மன உளைச்சல் அடைந்த சிறுமி கடந்த 20ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியேறி சேலத்தில் இருக்கின்ற தெரிந்தவரை வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சிறுமி இருப்பதை அறிந்து கொண்ட சிறுமியின் தாயும், அவருடைய கள்ளக்காதலனும் சேலத்திற்கு சென்று அவரை கருமுட்டை விற்பதற்கு மீண்டும் ஈரோட்டிற்கு அழைத்தார்கள். ஆனால் சிறுமி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இத்தகவல் அறிந்த சிறுமியின் உறவினர்கள் சேலத்துக்கு விரைந்து சென்று சிறுமியை மீட்டு ஈரோடு சூரம்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்கள். இப்புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து சிறுமி தாய், தாயின் கள்ளக்காதலன், மாலதி ஆகிய 3 பேரையும் கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் வழக்குப் பதிந்து நேற்று கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |