சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு சிறை தண்டனை நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள நெடுங்காடு கிராமத்தில் கூலித்தொழிலாளியான ஜெயராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் பெற்றோருடன் வசித்து வரும் 4-ஆம் வகுப்பு சிறுமியை கடந்த 2020 -ஆம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஜெயராமனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்நிலையில் நேற்று இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்ற நீதிபதி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஜெயராமனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்