Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சிறுமியை வற்புறுத்திய வாலிபர்…. போக்சோ சட்டத்தில் கைது…. மீண்டும் அரங்கேறிய சம்பவம்….!!

17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை அடுத்துள்ள வெப்படையில் நூற்பாலை ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த நூற்பாலையில் நெல்லையை சேர்ந்த 17 வயது சிறுமி பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அதே ஆலையில் வெண்ணந்தூரில் வசிக்கும் மோகன்ராஜ் என்ற வாலிபர் சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகின்றது.

இதனையடுத்து வாலிபர் சிறுமியை வற்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளளர். இதுகுறித்து அந்த 17 வயதுதிருச்செங்கோடு  சிறுமி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் திருச்செங்கோடு மகளிர் காவல்துறையினர் விசாரணை நடத்தி மோகன்ராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |