Categories
கரூர் மாவட்ட செய்திகள்

சிறுமியை வைத்து பாலியல் தொழில்…. ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் உள்பட 9 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள தொழிற்பேட்டை பகுதியில் இருக்கும் வீட்டில் 16 வயது சிறுமியை அடைத்து வைத்து பாலியல் தொழில் செய்வதாக அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் பாலியல் தொழிலில் ஈடுபாடுபவர்களை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட வீட்டில் அதிரடி சோதனை நடத்தி 3 பெண் தரகர்கள், 5 வாலிபர்கள் ஆகியோரை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் 16 வயது சிறுமியை மீட்டு விசாரித்தனர்.

அந்த விசாரணையில் கரூர் பகுதியை சேர்ந்த மேகலா, மாயா, சாந்தி ஆகிய மூன்று பெண் தரகர்கள், கார்த்திகேயன், கார்த்தி, சந்தோஷ் குமார், சமுத்திரபாண்டி, கௌதம் ஆகியோர் இணைந்து கட்டாயப்படுத்தி சிறுமியை கடந்த 6 மாதங்களாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதனையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் 8 பேரையும் கைது செய்தனர். இவர்களுக்கு கரூரை சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மோகன் என்பவரும் உடந்தையாக இருந்துள்ளார். அவரையும் நேற்று போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

Categories

Tech |