17 வயது சிறுமியை திருமணம் செய்துகொண்டு கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை அடுத்துள்ள வடுகபட்டி அருந்ததியர் தெருவில் கபிலர் என்பவர் வசித்து வருகிறார். இவர் நாமக்கலில் முட்டை கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் கடந்த ஆண்டு கபிலருக்கும் பேளுக்குறிச்சியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது அந்த சிறுமி கர்பமாக உள்ள நிலையில் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் சிறுமியை கொடுமை படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சிறுமி குழந்தைகள் நல குழுமத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன் அடிப்படையில் அதிகாரிகள் சிறுமியின் பெற்றோர் மற்றும் கபிலரின் குடும்பத்தினரை விசாரணைக்கு அழைத்துள்ளனர். ஆனால் அவர்கள் விசாரணைக்கு வர மறுத்ததால் குழந்தைகள் நல குழுமத்தினர் இச்சம்பவம் குறித்து பேளுக்குறிச்சி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி சிறுமியை திருமணம் செய்து கொண்டு கர்ப்பமாக்கிய கபிலரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.