சேலம் மாவட்டத்தில் சிறுமியை கடத்திச் சென்ற வாலிபரை போக்சோ சட்டத்தில் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டத்திலுள்ள பெரியவடகம்பட்டி பகுதியில் 16 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். அப்போது பெற்றோரிடம் கடைக்கு செல்வதாக கூறி விட்டு வெளியில் சென்ற சிறுமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் அக்கம்பக்கத்தில் மற்றும் உறவினர் வீடுகளில் சிறுமியை தேடி அலைந்துள்ளனர். ஆனால் சிறுமி எங்கும் கிடைக்கவில்லை. இதனையடுத்து சிறுமியின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். அந்த விசாரணையின் போது டேனிஸ்பேட்டை பகுதியை சேர்ந்த கொத்தனார் வேலை செய்யும் லோகநாதன் என்பவர் சிறுமியை கடத்தி சென்றது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சிறுமியை கடத்தி சென்றதற்காக போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் லோகநாதனை கைது செய்துள்ளனர். மேலும் அவரிடமிருந்து சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.