Categories
உலக செய்திகள்

சிறுமி கண்முன்னே தாய் மற்றும் சகோதரி பாலியல் துஷ்பிரயோகம்….!! காம கொடூரர்களின் வெறிச்செயல்…!!

உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ படையினர் பிப்ரவரி 24ஆம் தேதி தாக்குதலை தொடங்கினர். உக்ரைன் வீரர்களும் ரஷ்யாவுக்கு இணையாக பதிலடி கொடுத்து வரும் நிலையில் இரு தரப்பிலும் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்தப் போர் தாக்குதலின்போது ரஷ்ய வீரர்களால் உக்ரைனிய பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. அவற்றில் ஒரு கொடூரமான சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதன்படி உக்ரைனில் 17 வயது சிறுமி ஒருவர் அவருடைய தாயார் மற்றும் சகோதரி இருவரும் ரஷ்ய வீரர்களால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை நேரடியாக பார்த்துள்ளார்.

முன்னதாக ரஷ்ய வீரர்கள் அந்த சிறுமியிடம் நீ அசிங்கமாக இருக்கிறாய் அதனால் உன்னை பாலியல் பலாத்காரம் செய்ய மாட்டோம் என கூறியுள்ளனர். இதனை நேரடியாக பார்த்த அந்த சிறுமிக்கு மனநலம் பாதிக்கப்பட்டு பக்கவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த சிறுமி இரண்டு இறந்த உடல்களுடன் ஒரு மாதத்திற்கும் மேலாக அந்த வீட்டில் இருந்துள்ளார். தொடர்ந்து அந்த சிறுமி எப்படியோ அந்த வீட்டில் இருந்து தப்பித்து பக்கத்திலிருந்த கிராமத்திற்கு சென்றுள்ளார். இந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |