Categories
மாநில செய்திகள்

சிறுமி கருமுட்டை விற்கப்பட்ட விவகாரம்….. தாய் உட்பட 4 பேர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்…..!!!!

தமிழகத்தில் சில மாதங்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டத்தில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து தனியார் மருத்துவமனையில் அவரது கருமுட்டையை விற்பனை செய்ததாக காவல் துறக்க புகார் வந்தது. புகாரின் பெயரில் விசாரணை செய்த போது சிறுமியின் தாய் உட்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். சிறுமியின் தாய், சிறுமியை கட்டாயப்படுத்தி கருமுட்டை விற்பனை செய்ய வைத்ததும், அதன் மூலம் பணம் சம்பாதித்து வந்ததும் தெரிய வந்தது. மேலும் தாயின் இரண்டாவது கணவர் சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததும், 8 முறைக்கு மேல் கருமுட்டை எடுத்து விற்கப்பட்டதும் தெரியவந்தது.

இதனையடுத்து ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் காவல்துறையினர், தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககத்தின் தலைவர் தலைமையிலான மருத்துவ குழுவினர் தொடர் விசாரணை நடத்தி, கருமுட்டை விற்பனை செய்யப்பட்ட 4 மருத்துவமனைகளுக்கும் சீல் வைத்தனர். சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை, இடைத்தரகர் மாலதி உள்ளிட்ட 4 பேர் இந்த வழக்கு சம்மந்தமாக கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் தற்போது அவர்கள் அனைவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

Categories

Tech |