ஈரோட்டில் 16 வயது சிறுமியிடம் பலமுறை கருமுட்டை எடுக்கப்பட்டு விற்பனை செய்த விவகாரத்தில் ஈரோட்டில் உள்ள சுதா என்று தனியார் மருத்துவமனை ஸ்கேன் மையங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். அதுமட்டுமில்லாமல் மருத்துவமனையில் புதிய நோய்ளிகளை சேர்க்கக்கூடாது என்றும், சிகிச்சை பெற்று வரும் உள்நோயாளிகளை 15 நாட்களில் டிஸ்ஜார்ச் செய்ய வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டது. மேலும் கருத்தரித்தல் மருத்துவமனையில் பதிபை சஸ்பென்ஸ் செய்ததும் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுகளை எதிர்த்து தனியார் மருத்துவமனை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மருத்துவமனை தரப்பில் மருத்துவமனையின் புதிய நோயாளிகளை சேர்க்கக்கூடாது என்றும், சிகிச்சை பெற நோய்களை 15 நாட்களில் டிஸ்சார்ஜ் செய்ய உத்தரவிட்டுள்ளதாகவும், சட்டப்படி உரிய காரணங்களை தெரிவிக்காமல் மருத்துவ கருவிகள் சீல் வைக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதனால் மருத்துவ தொழிலை மேற்கொள்ள முடியாமல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வாதிடப்பட்டது.
இதற்கு தமிழக சுகாதாரத்துறை தரப்பில் விதிகளை மீறி செயல்பட்ட மருத்துவமனை மீது பொதுநலன் கருதி நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், சட்டத்தில் அதற்கு இடம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் விளக்கம் அளிக்கப்பட்ட நோட்டீஸ் அனுப்பினால் அதற்குள் அவர்கள் ஆதரங்களை அழித்துவிடக்கூடும் என்பதால் நோட்டீஸ் கொடுக்காமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியிடம் இருந்து 9 முறை கருமுட்டை எடுக்கப்பட்டுள்ளதாக சிறுமியின் வயதை 27ஆம் மாற்றி மோசடி செய்துள்ளனர் . அந்த சிறுமியின் ஆதார் அட்டை போலியாக தயாரித்து உள்ளனர். இது விதிமீறல் என அரசு தலைப்பில் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி 35 ஆண்டுகளாக செயல்படும் மருத்துவமனை மீது முந்தைய காலத்தில் எந்த புகாரும் இல்லை என்றும் மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்க அவகாசம் வழங்கி விதிமீறல் இருப்பதாக திருப்தி அடைந்தால் மட்டுமே மருத்துவமனை பதிவை சஸ்பெண்ட் செய்ய முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார். மேலும் மருத்துவமனையின் பதிவை சஸ்பெண்ட் செய்வதற்கான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை என்று கூறி தமிழக அரசியல் உத்தரவுகளை ரத்து செய்த நீதிபதி இந்த விவகாரம் குறித்து சுகாதார அதிகாரிகள் மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்க அவகாசம் வழங்கி 12 வாரங்களுக்கு இறுதி உத்தரவை தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டார். மருத்துவமனையில் உள்ள ஸ்கேன் உள்ளிட்ட கருவிகளுக்கு வைக்கப்பட்ட சீல்களை அகற்றவும் நீதிபதி உத்தரவிட்டார்.