Categories
தேசிய செய்திகள்

சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை… “பணம் தர மறுத்ததால் இளைஞர்களின் கொடூர செயல்”… பெரும் அதிர்ச்சி…!!!!!

பணம் தர மறுத்ததால் சிறுமியின் கூட்டு பாலியல் வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டம் கிராமத்தை சேர்ந்த ஷகில் என்னும் இளைஞர் வசித்து வருகிறார். இந்த இளைஞருடன் அதே கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி பழகி வந்துள்ளார். இதற்கிடையே கடந்த வருடம் டிசம்பர் 31ஆம் தேதி சிறுமிக்கு போன் செய்த அந்த இளைஞர்  ஆசைக்கு இணங்க மறுத்துவிட்டால் தன்னிடம் இருக்கும் ஆபாச புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி ஷகில் கூறிய இடத்திற்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் அங்கு காத்திருந்த ஷகில் உட்பட எட்டு பேர் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாக எடுத்து இருக்கின்றனர். அதன் பின் தங்கள் ஆசைக்கு இணங்க மறுத்தால் வீடியோவை வெளியிட்டு விடுவோம் என மிரட்டி எட்டு பேரும் சிறுமியை கடந்த ஜனவரி 3 மற்றும் ஏப்ரல் 6 ம் தேதி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர். அதன்பின் தாங்கள் எடுத்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடாமல் இருக்க வேண்டுமானால் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் தர வேண்டும் என சிறுமியிடம் மிரட்டி இருக்கின்றனர். இந்த நிலையில் அந்த மிரட்டலுக்கு பயந்த சிறுமி ஐம்பதாயிரம் ரூபாய் வரை பணம் கொடுத்திருக்கின்றார்.

இதனை தொடர்ந்து மிரட்டிய அந்த கும்பல் சிறுமி பணம் தராததால் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்னர். மேலும் இந்த வீடியோ பற்றி சிறுமியின் குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது இதனை அறிந்த அந்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து போலீசில் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த புகாரை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து பணம் கேட்டு மிரட்டிய எட்டு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |