Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சிறுமி தற்கொலை வழக்கில் தண்டனை…. நீதிமன்ற வளாகத்தில் அரளி விதைகளை தின்ற வாலிபர்…. பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேல தேவதானம் பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் மில்லில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வத்திற்கும் 17 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தபோது வரதட்சணையாக செல்வம் வீட்டில் இருந்து அதிக பணம் கேட்டதாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட தகராறில் கடந்த 2019-ஆம் ஆண்டு சிறுமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் செல்வத்தை கைது செய்தனர்.

இந்த வழக்கினை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் செல்வத்திற்கு 6000 ரூபாய் அபராதமும், 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் விதித்து உத்தரவிட்டது. இதனால் நீதிமன்ற வளாகத்திலேயே செல்வம் அரளி விதைகளை தின்று தற்கொலைக்கு முயற்சி செய்தார். உடனடியாக அவரை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |