சேலம் மாவட்டத்தில் சிறுமியை கற்பழித்த தொழிலாளி தஞ்சம் அடைந்திருந்த முதியவரின் வீட்டை சிறுமியின் குடும்பத்தினர் சூறையாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள தாரமங்கலம் பகுதியில் கீழ்மாட்டையாம்பட்டி பகுதியில் 9 வயது சிறுமியை தனபால் என்ற நெசவுத் தொழிலாளர் கற்பழித்து வெட்டிக் கொன்றுள்ளார். இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் வீட்டில் தஞ்சம் அடைந்திருந்த தனபாலனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலும் தனபாலன் பழனிசாமி வீட்டில் தஞ்சம் அடைந்திருந்தை கேள்விப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் பழனிசாமி வீட்டிலிருந்த ஏ.சி, வாஷிங் மிஷின், மோட்டார் சைக்கிள் உட்பட அனைத்து பொருட்களையும் அடித்து நொறுக்கியுள்ளனர். இதனால் காவல் துறையினர் சேதத்தை 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.