திருவாரூரில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கி கர்ப்பத்தை கலைக்க முயன்ற மூர்த்தி என்பவருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்தாடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சில காமக் கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். அதனால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவருகிறது. இந் நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து மூர்த்தி என்பவர் அவரை கர்ப்பமாகியுள்ளார்.
அதன்பிறகு அந்த சிறுமியை மிரட்டி கர்ப்பத்தை கலைக்க சொல்லியுள்ளார். அந்த நபர் மீது சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பிறகு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அவர் கர்ப்பத்திற்கு மூர்த்தி தான் காரணம் என்பது உறுதியானது. அதனால் அவருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால் சிறுமியின் பெற்றோர் குற்றவாளி மூர்த்திக்கு இன்னும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.