Categories
தேசிய செய்திகள்

“சிறுமி பாலியல் பலாத்காரம்” திருமணம் செய்து கொள்வதாக குற்றவாளி சமரசம்… கோர்ட்டின் அதிரடி உத்தரவு….!!!!

பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்திற்கு ஐபிசி மற்றும் போக்சோ பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட குற்றவாளியின் வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த குற்றவாளி ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில் குற்றவாளி சிறுமியின் பெற்றோரிடம் சிறுமிக்கு 18 வயது ஆன பிறகு நானே திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஒரு பத்திரம் எழுதி கொடுத்துள்ளார். இதற்கு சிறுமியின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வழக்கு விசாரணையின் போது குற்றவாளி தன்னுடைய வழக்கறிஞர் மூலம் நீதிபதியிடம் பத்திரத்தை காட்டி விவரத்தை கூறி தன் மீது இருக்கும் வழக்குகளை தள்ளுபடி செய்யுமாறு கூறியுள்ளார்.

இதற்கு நீதிபதி கடும் அதிருப்தி தெரிவித்தார். அதன் பிறகு குற்றவாளி சமரசம் செய்வதால் குற்றம் செய்தது குற்றம் இல்லை என்று ஆகிவிடாது. இது போக்சோவின் நோக்கத்தையே கேள்விக் குறியாக்கி விடும். எனவே இது போன்ற சமரசங்களை ஏற்க முடியாது. இது போன்ற சமரசங்கள் தொடர்ந்தால் எதிர்காலத்தில் யார் வேண்டுமானாலும் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு சமரசம் செய்து கொள்ளலாம் என்ற நிலை வந்து விடும் என்று நீதிபதி கூறினார். இந்த தீர்ப்பை குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பிரியங்க் கனூங்கோ வரவேற்றுள்ளார். மேலும் இதுபோன்ற தீர்ப்புகள் தான் குழந்தைகளுக்கு உதவும் என்றும் போக்சோ சட்டங்களின் மூலம் அவர்களுக்கு நியாயம் கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |