Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“சிறுமி பாலியல் பலாத்காரம்” தந்தை உள்பட 3 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்…. அதிரடி நடவடிக்கை…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் 12 வயது சிறுமிக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் சிறுமியின் தாய் தனது மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிறுமியை பரிசோதனை செய்து மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சிறுமியிடம் விசாரித்த போது, தனது தந்தை நாகல் நகர் பகுதியில் வசிக்கும் முகமதுரபிக்(59), கண்ணன்(50) ஆகியோருடன் இணைந்து பலாத்காரம் செய்ததாக சிறுமி தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சிறுமியின் தந்தை, முகமது ரபிக், கண்ணன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து திண்டுக்கல் ஜெயிலில் அடைத்தனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் விசாகன் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனின் பரிந்துரையின் பேரில் மூன்று பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார். பின்னர் மூன்று பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |