Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சிறுமி பாலியல் பலாத்காரம்…. வாலிபருக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள காக்கநல்லூரில் தங்கபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தியாகராஜன்(26) என்ற மகன் உள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு தியாகராஜன் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் தாய் அம்பை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் தியாகராஜனை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் தியாகராஜனுக்கு ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும், 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டது.

Categories

Tech |