கரூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார் சைல்டு ஹெல்ப்லைன் பணியாளர்களுடன் இணைந்து பள்ளிக்கு செல்லாமல் இருக்கும் குழந்தைகளை மீட்பதற்கு விசாரணை நடத்தி வந்துள்ளார். அப்போது 10- ஆம் வகுப்பு தேர்வு எழுதி தோல்வியடைந்த 16 வயது சிறுமி ஒருவரை கண்டறிந்து சதீஷ்குமார் விசாரணை நடத்தியுள்ளார். அந்த விசாரணையில் உறவினர் வீட்டில் தங்கி சிறுமி ஆடு, மாடுகளை மேய்த்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று முதியவர் ஒருவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை அறிந்த சித்தப்பா முதியவரை கண்டித்துள்ளார். பிறகு சித்தப்பாவும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதற்கிடையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை காதலித்த வாலிபரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவேன் என அந்த வாலிபர் மிரட்டியதாக தெரிகிறது. இது தொடர்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சா சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் பெரியசாமி, சிறுமியின் சித்தப்பா இடும்பன், வாலிபர் சஞ்சீவ் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.