Categories
தேசிய செய்திகள்

“சிறுமி பாலியல் வன்கொடுமை” சிறிய சம்பவம்…. அமைச்சரின் கருத்தால் சர்ச்சை…!!

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது சிறிய சம்பவம் என்று சத்தீஸ்கர் அமைச்சர் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது

சத்தீஸ்கர் மாநிலத்தில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது சிறிய சம்பவம் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவரும் சத்தீஸ்கர் அமைச்சருமான சிவகுமார் கூறியுள்ளார். அவரது இந்த கருத்தை பாஜகவினர் கடுமையாக விமர்சித்துள்ளனர். இதற்கு அமைச்சர் சிவகுமார் தான் கூறிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது என விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் உத்திரப்பிரதேசத்தின் ஹத்ராஸில் மிகவும் துயரமான சம்பவம் ஒன்று நடந்தது.

முன்னாள் பாஜக முதல்வர் எதற்காக அந்த சம்பவம் பற்றி ட்விட் செய்யவில்லை சத்தீஸ்கரில் உள்ள பால்ராம்பூரில் சிறிதாக என்ன சம்பவம் நடந்தாலும் மாநில அரசை அவர் விமர்சனம் செய்வதை தவிர வேறு எதையும் செய்ததில்லை என்று தான் அவர் பதில் அளித்ததாகவும் அந்த கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக கூறினார். மேலும் பால்ராம்பூர் வன்கொடுமை சம்பவத்தை சிறிய விஷயம் என்று நான் குறிப்பிடவில்லை எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.

Categories

Tech |