Categories
தேனி மாவட்ட செய்திகள்

சிறுமி பாலியல் வழக்கு…. தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித்தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்பளித்துள்ளார்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் தங்கசாமி என்ற நியூட்டன் என்பவர் வசித்து வருகிறார். கூலித்தொழிலாளியான இவர் கடந்த 2020ஆம் ஆண்டில் அதே பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமியை கத்தியை காட்டி மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனையறிந்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக ஆண்டிபட்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தங்க சாமியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில் இந்த வழக்கு தேனி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், இதற்க்கான இறுதி விசாரணை நேற்று நடைபெற்றுள்ளது. அப்போது வழக்கை விசாரித்து சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த தங்கசாமிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி வெங்கடேஷன் தீர்பளித்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் தங்கசாமியை பத்திரமாக அழைத்து சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5லட்சம் ரூபாய் தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |