சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள தாமரைகுளம் பகுதியில் டேனியல் ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் 17 வயது மாணவியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2019 ஆண்டு சிறுமியுடன் ஆசை வார்த்தைகள் கூறி வலுகட்டாயமாக கடத்தி சென்றுள்ளார். இதனையடுத்து கம்பம் பகுதியில் உள்ள விடுதிக்கு அழைத்து சென்று திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனைதொடர்ந்து சிறுமி அங்கிருந்து தப்பித்து வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக தென்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த டேனியல் ராஜ் மீது போக்சோ சட்டத்திலும், ஆள் கடத்தல் வழக்கிலும் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் இந்த வழக்கு தேனி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இதற்க்கான இறுதி விசாரணை நேற்று நடைபெற்றுள்ளது. மேலும் வழக்கை விசாரித்த நீதிபதி வெங்கடேசன் சிறுமியை கடத்தி சென்ற குற்றத்திற்காக 2 ஆண்டு சிறை தண்டனையும், பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்பளித்துள்ளார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் டேனியல் ராஜை காவல்துறையினர் மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.