Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சிறுமி பாலியல் வழக்கு… 5 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு… வாலிபருக்கு 20 ஆண்டுகள் தண்டனை…!!

சிறுமி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் அனந்தபுரம் பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து அந்துள்ளர். இவர் நாமக்கல் மாவட்டம் போடிநாயக்கன்பட்டியில் உள்ள ஒரு செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு போடி நாயக்கன்பட்டியை சேர்ந்த 15வயது சிறுமியிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி சக்திவேல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை அறிந்த சிறுமியின் தந்தை எருமப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி சக்திவேல் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த முருகன் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த வழக்கு நாமக்கல் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் 5 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று இறுதி விசாரணை நடைபெற்றுள்ளது. அப்போது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சக்திவேலுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 15,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் அவருடன் கைது செய்யப்பட்ட முருகனை விடுதலை செய்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் சக்திவேலை கோயம்புத்தூர் சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |