Categories
தேசிய செய்திகள்

சிறுமி முதல் பாட்டி வரை 100 பெண்கள்…. வாலிபரின் வெறிச்செயல்…. போலீஸ் அதிரடி….!!!!

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் பகுதியில் அஜய்(30) என்பவர் வசித்துவருகிறார். இவர் ஹைதராபாத்தில் உள்ள தனியார் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராம் மூலம் பல பெண்களுடன் பழகி அவர்களை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய பல பெண்கள் அவர்களது போட்டோ மற்றும் வீடியோக்களை இவருக்கு அனுப்பி உள்ளனர். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அஜய் நிர்வாண வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

அவரது வலையில் சிறுமிகள், கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள், குடும்ப பெண்கள் மற்றும் பெண் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பெண்கள் சிக்கி கொண்டனர். அவர்களிடம் அஜய் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளார். அதில் ஒரு சில பெண்கள் அவமானத்திற்கு பயந்து போலீசில் புகார் தராததால் மேலும் பல பெண்களிடம் அத்துமீறி உள்ளார். ஒரு சில பெண்கள் துணிந்து ஐதராபாத்தில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |