நெல்லையில் வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் 21 வயதாகின்ற ராஜ பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் அதே பகுதியில் வசித்து வரும் 12 வயது சிறுவனிடம் தகாத முறையில் அடிக்கடி நடந்து வந்துள்ளார். இச்சம்பவம் குறித்து சிறுவன் அவனுடைய வீட்டில் தெரிவித்துள்ளான். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுவனது குடும்பத்தினர்கள் களக்காட்டிலிருக்கும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அப்புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராஜ பாண்டியை போக்சோ சட்டத்தில் கைது செய்ததோடு மட்டுமல்லாமல் தீவிர விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.