இங்கிலாந்தை சேர்ந்த சிறுவர் ஒருவர் சுமார் 400 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பவளப்பாறை தனது தோட்டத்தில் கண்டுபிடித்துள்ளார்.
இங்கிலாந்தை சேர்ந்த தம்பதிகள் விஷ் சிங் (42 வயது) – சங்கீதா டூட்டி (40 வயது). இவர்களது மகன் சிங் ஜஹாமட் (6 வயது). இந்த சிறுவன் பழங்கால பொருள்களின் மீது மிகுந்த ஆர்வம் உள்ளவர். அதனால் எப்பொழுதும் தோட்டத்தில் எதையாவது ஒன்றை தேடிக் கொண்டே இருந்துள்ளார். இந்நிலையில் அந்த சிறுவன் சமீபத்தில் தோட்டத்தில் இருக்கும்போது அவருக்கு வித்தியாசமான பொருள் ஒன்று கிடைத்ததாக அவரது பெற்றோரிடம் காண்பித்துள்ளார்.
அந்த பொருளை பார்த்த அச்சிறுவனின் பெற்றோர் பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்ததால் அதனை புகைப்படம் எடுத்து பழங்கால பொருட்களை ஆய்வு செய்யும் குழுவினருக்கு சமூக வலைத்தளங்களில் அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து ஆராய்ச்சி மேற்கொண்ட அந்த குழுவினர் “இது சுமார் 400 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உள்ள பவளப்பாறை என்றும், இது தற்போது உலகத்தில் இல்லை முற்றிலும் அழிந்து போய்விட்டது” என்றும் கூறியுள்ளனர். இதனையடுத்து தான் பழங்கால பொருளை கண்டுபிடித்துவிட்டேன் என்று கூறி அந்த சிறுவன் துள்ளி குதித்து மகிழ்ச்சி அடைந்துள்ளார்.