அதிகாரியை கத்தியால் குத்திய 16 வயது சிறுவன் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவில் உள்ள kukumsky நகரிலுள்ள உள்துறை அமைச்சகத்தின் வளாகத்தில் 16 வயது சிறுவன் ஒருவன் பெட்ரோல் குண்டு வீசி உள்ளான். இதனால் வளாகத்தின் கண்ணாடி துண்டுகள் சிதறி அங்கு தீப்பற்றி எரிவதை காவல்துறை அதிகாரி ஒருவர் பார்த்துள்ளார். அதன் பிறகு மீண்டும் வெளியில் இருந்து மர்ம நபர் ஒருவர் வளாகத்திற்குள்ளே பெட்ரோல் குண்டு வீசுவதை பார்த்த அதிகாரி அவரை விரட்டி சென்று பிடிக்க முயன்ற போது 16 வயது சிறுவன் அதிகாரியை மூன்று தடவை கத்தியால் குத்தி இருக்கிறார்.
இதனைப் பார்த்த மற்றொரு காவல்துறை அதிகாரி சிறுவனிடம் அவரை விட்டு விடும்படி எச்சரிக்கை விடுத்து வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். ஆனால் சிறுவன் அவரை விட மறுத்ததால் போலீஸ் அதிகாரி சிறுவனை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதனால் துப்பாக்கி குண்டு பட்டு கீழே விழுந்த சிறுவனின் உயிர் மருத்துவர்கள் வருவதற்கு முன்பே பிரிந்து விட்டது. சிறுவன் எதற்காக இந்த தாக்குதலில் ஈடுபட்டான் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.